Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 மணிநேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் செய்த சாதனை! நயனுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சிக்னல்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தற்போது இவரின் கையில் கோலமாவு கோகிலா, கொலையுதிகாலம், விசுவாசம் என பல படங்கள் இருக்கிறது.

அண்மையில் அவர் நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வீடியோ வெளியானது. இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 24 மணிநேரத்தில் இதை 1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

இதில் அவரிடம் காமெடி நடிகர் யோகி பாபு கல்யாணம் பற்றி பேசுவது போல சில உரையாடல்களும் இருக்கும். நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் இருப்பது பலரும் அறிந்த ஒன்று.

அண்மையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள். புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். இந்நிலையில் இருவருக்கும் எப்போது திருமணம் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

தற்போது அவரின் காதலர் நேக்கு கல்யாண வயசு வந்திடுத்துடி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.