Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ்க்காக தன்னையே ஒதுக்கி கொண்ட பிரபல நடிகை!

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது எங்கு பார்த்தாலும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மகாநதி படத்தால் அவருக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் முன்னணி ஹிரோக்களுடன் நடித்து வந்தார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு (மகாநதி) படத்தில் சாவித்திரியாக நடித்தது பலத்த வரவேற்பை பெற்றது.

இதனால் மொத்த திரையுலகினரும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார்கள். அண்மையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட விழா நடத்தி படக்குழுவை கவுரவித்தார்.

ஆனால் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சமந்தா பட விழாக்களில் எதுவுமே கலந்துகொள்ளவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. முதலில் இப்படத்தில் சாவித்திரியாக நடிக்க இருந்தது சமந்தா தானாம்.

ஆனால் அவர் மறுத்து விட்டதால் கீர்த்தி சுரேஷை ஓகே செய்திருக்கிறார்கள். சமந்தாவிடம் இதுகுறித்து கேட்ட போது கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டு கண்கலங்கிவிட்டேன்.

அவருக்கு தான் எல்லா பாராட்டும் கிடைக்க வேண்டும். நானும் இந்த விழாவில் கலந்துகொண்டால் அவருக்கான முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடும் என கூறியிருக்கிறார்.