Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை லிசா ரேயின் இப்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்தவர் லிசா ரே. இவர் படங்கள் தாண்டி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

2009ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் சோகத்திற்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தான் நோயில் இருந்து குணமடைந்துவிட்டதாக அறிவித்திருந்தார். ஆனால் மீண்டும் சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி டெஹ்னி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடி இல்லாத புகைப்படத்தை எல்லாம் அவரே வெளியிட்டிருந்தார். கடும் போராட்டத்திற்கு பிறகு குணமடைந்த லிசா இப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார்.

இந்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தலைமுடி இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் என்னை பாதிக்காது. நான் நோயால் அவதிப்பட்ட நேரத்தில் எனக்கு நிறைய பேர் உதவினார்கள். இப்போது நான் பிஸியாக ஒரு புத்தகம் எழுதி வருகிறேன், அதோடு சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இருக்கிறது என்றார்.

கடும் நோயால் பாதிக்கப்பட்ட லிசாவின் இந்த அணுகுமுறை மற்றவர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.