Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட நடிகைக்கு கிடைத்த மிகப் பெரும் கௌரவம்!

விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ஃபெமினா சூப்பர் மகள் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது. இதில் சூப்பர் மகளாக வரலட்சுமி சரத்குமார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது அவரது தந்தையான சரத்குமார் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதை அவர் டுவிட்டரில் ’இதனை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.