Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் கூறப்படும் இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

திரைக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அதாவது தனது முந்தைய படமான நானும் ரவுடி தான் படத்தில் நடித்தது போல் இப்படத்திலும் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் கூடியுள்ளது.

இவருடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், தொலைக்காட்சி பிரபலங்களான அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின், நவீன்குமார் போன்றோரும் நடித்திருக்கும் இப்படம் சென்ஸார் அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் படத்திற்கு யு/ஏ சான்று அளித்துள்ளனர்.