Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இளம் கதாநாயகர்கள் கூடவே ஜோடி சேர்வதற்கு விரும்புகிறார். இல்லையென்றால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகின்ற கதைகளையே தேர்வு செய்கிறார்.

அந்த வகையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கிறார். இந்த கதையும் கதாநாயாகிக்கு முக்கியத்துவம் தருகின்ற படம் போலதான் தெரிகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற கல்யாண வயசு பாடல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் ஈர்த்தது.

தற்போது இப்படத்தில் நயன்தாரா காசுக்காக கஞ்சா விற்கும் பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயன்தாரா இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் இவரது காதலரான விக்னேஷ் சிவன் அனிருத் இசையில் முதன்முதலாக ஒரு பாடலை பாட இருக்கிறாராம். எங்கே போனாலும் தனது காதலருக்கென ஒரு வேலையை பிடித்து விடுகிறார் என கோலிவுட்டில் பேசி கொள்கின்றனர்.