Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவைவிட்டு போகும் காலா பட நடிகை?

ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்கித் இயக்கியிருந்த காலா படம் போன மாதம் ஜுன் 7ல் வெளிவந்தது. ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் இப்படம் வசூலை கணிசமாக அள்ளியது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மருமகள்களாக நடித்தவர்களில் சிங்கப்பூர் சுகன்யாவும் ஒருவர். இப்படத்தின் மூலம் தற்போதுதான் பிரபலமான அவர் சினிமாவை விட்டு செல்கிறார்.

ஏனெனில் அவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தனது கல்லூரி நண்பரான விக்ரம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்கிறார். விக்ரம் சென்னையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

ஜூலை 14ல் இவர்களது திருமணம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிசழ்ச்சி சுகன்யாவின் பூர்வீகமான திண்டுக்கல்லில் நடைப்பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் காலா படக்குழு கலந்துக் கொள்வார்கள் என தெரிகிறது.