Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் கல்லூரி ஆசிரியரை அடித்து உதைத்த சீரியல் நடிகை- இந்த காரணத்தினால் தானா

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் சின்ன திரையை சேர்ந்த ஓர் நடிகை தனது சக நடிகருடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த விஜய் பிரகாஷ் என்ற கல்லூரி ஆசிரியர் அந்த நடிகையுடன் வந்த மற்றொரு துணை நடிகையை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகை விமானம் தரையிறங்கியதும் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும் எடுத்த போட்டோக்களை டெலிட் செய் என்று கூறியதற்கு தான் எந்த போட்டோவையும் எடுக்கவில்லை என அந்த நபர் கூறியுள்ளார்.

பின்னர் கூடவந்த சக நடிகர் போலீஸிடம் தெரிவிக்க, அந்த ஆசிரியரை தனியாக போலீஸார் விசாரித்ததில் போட்டோக்கள் எடுக்கப்பட்டது தெரியவந்தது. எனவே போலீஸார் அவரிடம் இதேபோல் வேறு சிலரிடமும் தவறாக நடந்துள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

தன்னுடன் விமானத்தில் பயணம் செய்த கல்லூரி ஆசிரியரை சின்னத்திரை நடிகை ஒருவர் அடித்து உதைத்துள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.