Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானவர், ரெஜினா கசண்ட்ரா. அப்படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் சிவா கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிறகு கிளாமரா..நானா..சத்தியமா நடிக்க மாட்டேன் என கூறிவந்த அவர், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று வந்தவுடன் இதையெல்லாம் நானா சொன்னேன் என்ற அளவிற்கு படுகவர்ச்சியை காட்ட துவங்கினார்.

கிளாமரின் மூலமாக எளிதாக முன்னணி நடிகையாகி விடலாம் என எண்ணியிருந்த அவருக்கு தற்போது அவரது நடிப்பில் வெளியான மிஸ்டர்.சந்திரமௌலி படம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதாநாயகி இவர்தான் என்பதை மறந்து அனைவரும் வரலட்சுமியின் நடிப்பையே பாராட்டி புகழ்ந்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த அவர் மறுபடியும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார். ஆனால் இந்த படத்தின் மூலம் நடிப்பு என்பது கிளாமர் மட்டும் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பார்