Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் போற்றும் உன்னத படைப்பு- மறக்க முடியுமா?

இதெல்லாம் சாத்தியமா? என்று பலர் கேள்விக்கேட்டு ஒதுங்கும் நேரத்தில் அதை செய்து முடித்துவிட்டு அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துவிடுவார் கமல்ஹாசன். இவரின் கனவுப்படைப்பான தசாவதாரம் இதே நாளில் தான் 8 வருடத்திற்கு முன் வந்தது.

இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை செய்யாத 10 வேடங்களில் அதிலும் 10 வித்தியாசமான வேடம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 10 வித்தியாசமான குரல் பேசி அதிரவைத்திருப்பார்.

சைவமும்-வைணவமும் ஆண்ட காலத்தில் தொடங்கும் கதை, 2004 சுனாமியுடன் முடியும், இவை அனைத்திற்கு நூல் பிடித்து ஒரு அழகான ஆடையை வடிவமைத்தது போல் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பார் கமல்ஹாசன்.

எந்த கதாபாத்திரமும் படத்திற்கு தேவையில்லை என்று உங்களால் ஒதுக்கவே முடியாது, காமெடியில் கலக்கிய பல்ராம் நாயுடு, வில்லனாக மிரட்டிய ப்ளச்சர், தன் மண்ணிற்காக போராடும் பூவராகவன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மை வாய்ந்தவை.

‘கடவுள் இல்லன்னு நா எங்க சொல்றேன், இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் சொல்றேன்’, ‘அப்படி உங்கள் கடவுளுக்கு சக்தி இருந்த என்ன மாதிரி சைண்டிஸ்ட்டுக்கு ஏன் இப்படி ஒரு யோசனைய வரவைக்கனும்’ போன்ற வசனங்கள் மூலமாக சிந்திக்கவும் வைத்தார் கமல்.

இவை அனைத்தையும் விட பல லட்சம் உயிரை பழிக்கொண்ட சுனாமியை 8 வருடத்திற்கு முன்பே தத்ரூபமாக காட்டி மிரள வைத்தார். இந்த படத்தின் பாதிப்பில் தான் தற்போது பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து சபாஷ் நாயுடு உருவாக்கியுள்ளனர். ஏன் மற்ற கலைஞர்கள் பற்றி குறிப்பிடவே இல்லை என்றால், கமலை தவிர இந்த படத்தில் வேறு யாருமே நம் நினைவிற்கு வரமாட்டார்கள் என்பதே நிஜம். மேலும் இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்த்து ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜானே அசந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி காலத்தால் அழியாத, அழிக்க முடியாத படத்தை கொடுத்த தசாவதாரம் குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

விஜய் சார் ரொம்ப பிடிக்கும், ஏனென்றால்? கயல் ஆனந்தி