Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடரும் மலையாள நடிகைகளின் விவாகரத்து

அழகும், திறமையும் கொண்டவர்கள் மலையாள நடிகைகள். தமிழ் சினிமா மட்டுமில்லாது தெலுங்கு சினிமாக்களிலும் தற்போது மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம்.

அவர்கள் சினிமாவில் வெற்றிநடைபோட்டாலும் குடும்ப வாழ்க்கையில் துயரத்துக்கு ஆளாகுகின்றனர். அப்படி திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகைகளின் விவரம் இதோ

காவ்யா மாதவன்

2009ல் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறி தனது கணவரை 2011ல் விவாகரத்து செய்து கொண்டார்.

மஞ்சு வாரியர்

1998ல் நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாட்டால் 2015ல் விவாகரத்து பெற்றார்.

மம்தா மோகன்தாஸ்

2011ல் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை மணந்த இவர் கருத்து வேறுபாடால் ஒரு வருடத்திலேயே பிரிந்தார்.

லிசி

இயக்குனர் பிரியதர்ஷனை 1990ல் காதல் திருமணம் செய்துகொண்ட இவர் 13வருடங்கள் வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்றார்.

ஊர்வசி

2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்ட இவர் 2008ல் விவாகரத்து செய்தார்.

ஜோதிர்மயி

2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் 8 வருட வாழ்க்கைக்கு பிறகு 2011ல் விவாகரத்து செய்து கொண்டார்.

இவர்களை போல் நடிகைகள் கலாரஞ்சனி, லெனா ஆகியோரும் விவாகரத்து செய்துள்ளனர்.

இந்த லிஸ்டில் தற்போது புதிதாக இடம்பெற இருக்கிறார் நடிகை அமலாபால்.