Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2016ம் ஆண்டு சினிமா- ஒரு ரீவைண்ட்

மக்கள் இன்று ஒரு இயந்திர வாழ்க்கைக்குள் மாட்டிக்கொண்டு நாளை என்ன? என்று எதையோ தேடி ஓடுகின்றனர். இதில் அவர்களின் பெரிய பொழுதுப்போக்கு அம்சமாக இருப்பது சினிமா மட்டுமே, கவலைகளை மறந்து 3 மணி நேரம் வெளிச்சமில்லாத அறையிலும் பிரகாசமாக மக்கள் இருப்பது தியேட்டரில் தான், இந்த வருடம் சினிமா மற்றும் பிரபலங்கள் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், துயரங்கள் என அனைத்தையும் பார்ப்போம்.

வெற்றிகள்

இந்த வருடம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கமல், அஜித் படங்கள் மட்டும் தான் வரவில்லை, இதை தவிர்த்து மற்ற நடிகர்கள் பலரின் படங்கள் வெளிவந்தது, இதில் வெற்றியாளர்கள் யார் என்பதை பார்ப்போம்.

 • ரஜினி-கபாலி
 • விஜய்- தெறி
 • சூர்யா- 24,
 • விக்ரம்- இருமுகன்
 • தனுஷ்- கொடி
 • சிம்பு- அச்சம் என்பது மடமையடா
 • விஜய் ஆண்டனி- பிச்சைக்காரன், சைத்தான்
 • சிவகார்த்திகேயன் -ரஜினி முருகன், ரெமோ
 • விஜய் சேதுபதி- சேதுபதி, காதலும் கடந்து போகும், ஆண்டவன் கட்டளை, தர்மதுரை
 • உதயநிதி-மனிதன்
 • கார்த்தி- தோழா

இது மட்டுமின்றி சென்னை-28 இரண்டாம் பாகம், விசாரணை, தேவி, அப்பா ஆகிய படங்கள் வெற்றிவாகை சூடியது,

மலையாளம்

மலையாள சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. ஆம், மலையாள சினிமாவில் முதன் முறையாக மோகன்லால் நடித்த புலி முருகன் படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது மட்டுமின்றி இவரின் ஒப்பன் ரூ 70 கோடி வசூல் செய்தது. மேலும், மம்முட்டி நடிப்பில் இந்த வருடம் பெரிதும் எந்த படங்களும் ஹிட் ஆகவில்லை.

தோப்பில் ஜோப்பன் மட்டுமே ரூ 20 கோடி வசூல் செய்தது, மேலும், நிவின் பாலியின் Jacobinte Swargarajyam, துல்கரின் கம்ப்படிப்பாடம், பஹத் பாசிலின் மகேஷிண்டே பிரதிகாரம் ஆகிய படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தெலுங்கு

தெலுங்கு பொறுத்தவரை மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு, அல்லு அர்ஜுனின் சாரைநோடு, ஜுனியர் என்.டி.ஆரின் ஜனதா கரேஜ் ஆகிய படங்கள் வசூலில் பெரும் புரட்சி செய்தது. சமீபத்தில் வந்த தனிஒருவன் ரீமேக்கான துருவா கூட ரூ 70 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், பெரிதும் எதிர்ப்பார்க்காத அ..ஆ, படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹிந்தி

ஹிந்தி திரையுலகின் இந்த வருடம் சுல்தான், தங்கல், எம்.எஸ்.தோனி, ஏர்பிலிட், ஹவுஸ்புல்-3, ருஸ்தம், ஏ தில் முஷ்கில் ஆகிய படங்கள் ரூ 200 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் மராத்தி படமான சாய்ரட் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்து அனைவரின் கவனைத்தும் ஈர்த்தது.

தோல்விகள்

தமிழ் சினிமாவில் தோல்விகள் பொறுத்தவரை எப்போதும் அதிகம் தான். அந்த வகையில் இதோ

 • ஜெயம் ரவி- மிருதன்
 • ஜீவா- திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம்
 • ஆர்யா- பெங்களூர் நாட்கள்
 • விஷால்- கதகளி, மருது, கத்தி சண்டை
 • விஜய் சேதுபதி- றெக்க, இறைவி
 • உதயநிதி- கெத்து
 • தனுஷ்- தொடரி
 • கார்த்தி- காஷ்மோரா

இதுமட்டுமின்றி கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, தாரை தப்பட்டை, வீரசிவாஜி, வாகா, கத்தி சண்டை, பலே வெள்ளையத்தேவா, நாயகி என பல படங்கள் தோல்வியடைந்துள்ளது.

மற்ற மொழிகளில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படங்கள் கஷ்பா, ஒயிட், சர்தார் கப்பர் சிங், ப்ரம்மோற்சவம், பேன், Befikre, போர்ஸ்-2, அகிரா, மொகஞ்சதாரோ ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

விவாகரத்து

இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் விவாகரத்து விஷயத்தில் வில்லங்கம் தான் ஜாஸ்தி, ஆம், பல முக்கிய பிரபலங்கள் தங்கள் ஜோடிகளை விட்டு பிரிந்தனர்.

தமிழ் சினிமாவில் விஜய்-அமலா பால், சௌந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின், கமல்-கௌதமி(திருமணம் ஆகாமல் ஒன்றாக இருந்து பிரிந்தனர்), ஆகியோர் பிரிந்தனர், மேலும் விஜே ரம்யாவும் அவர் கணவரை பிரிந்தார்.

மேலும், பாலிவுட்டில் பரான் அக்தர், அர்பாஸ் கான், கரீஷ்மா கபூர் ஆகியோர் விவாகரத்து செய்துள்ளனர்.

ஹாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதி ஏஞ்சலினா ஜுலி- பிராட் பிட்டும் பிரிந்தனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன் மனைவியை விவாகரத்து செய்தார்.

நடிகை ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.

திருமணம்

நடிகர் அஸ்வின் சென்னையை சார்ந்த சோனாலி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை பூஜா இலங்கையை சார்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார்.

முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை பிரிந்த திலிப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்தார்.

முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்த மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

சின்னத்திரை புகழ் சுஜிபாலா திடிர் திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜுமுருகன், 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

பிரபல நடிகை அசின் பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பாலிவுட் நடிகை பிபாச பாசு, நடிகர் ஜான் ஆபிரஹாமை பிரிந்த ஓரிரண்டு ஆண்டுகளில் கரன் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகர் பாபி சிம்ஹா பிரபல நடிகை ரேஸ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இறப்பு

இந்த வருடத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் மறக்காது, ஆம், பிரபல நடிகையாக இருந்து அரசியலில் காலடி எடுத்து வைத்து கடின முயற்சியால் 6 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் முடியாமல் இறந்தார்.

பாலிவுட் சீரியல் நடிகர் கமலேஷ் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டார்.

நா.முத்துக்குமார், அண்ணாமலை, எழுத்தாளர்+நடிகர் சோ.ராமசுவாமி, வியட்நாம் வீடு சுந்தரம், சினிமா டெக்னிஷியன் அப்புடு, குமரிமுத்து, புகைப்பட கலைஞர் செல்லையா, ஜோதிலட்சுமி, பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் உடல்நலம் முடியாமல் இறந்தனர்.

மேலும், தொலைக்காட்சி நடிகர்களான சாய் பிரசாந்த், சபர்ணா ஆகியோர் மன வேதனையால் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சர்ச்சைகள்

நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி நிரந்தர நீக்கம்.

கரீனா கபூர் தன் மகனுக்கு தைமூர் என்று பெயர் வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஏனெனில் தைமூர் என்பவர் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அரசனாவான்.

நடிகர் சங்க கூட்டத்தில் அடிதடி மோதல் நடந்து கருணாஸ் கார் முதல், விஷால் வீடு வரை கல் எறியப்பட்டது.

இளைய தளபதி விஜய் மோடியின் கருப்புப்பணம் ஒழிக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று கூறினார், இதற்கு மக்களிடமிருந்து ஆதரவும், அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதே திட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்த போது இயக்குனர் அமீர் அவரை கடுமையாக தாக்கினார்.

காவ்யா மாதவன், திலிப்பை திருமணம் செய்த போது என் மகளை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர் என மஞ்சு வாரியர் கூறினார்.

நடிகர் ஆர்யா ஜல்லிக்கட்டிற்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் அஜித் ரசிகர்களிடம் மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி பதிலுக்கு அவர்களும் பேசி பெரிய போர்க்களமே ஆனது.

லட்சுமி ராமகிருஷ்ணன் ஆர்ஜே பாலாஜியிடம் சண்டை போட்டு சமூகவலைத்தளத்திலிருந்து வெளியேறினார். மேலும் நடிகை ஸ்ரீப்ரியா, ராதிகா ஆகியோரும் பஞ்சாயத்து நிகழ்ச்சி பண்ணும் நடிகைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம் வெளிவர, அதுக்குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க, முதலில் உங்கள் உடலை பாருங்கள், அதை அசிங்கமாக பார்ப்பவர்கள் தான் மற்றவர்கள் உடலை அசிங்கமாக நினைப்பார்கள் என பொது இடத்திலேயே பேசினார்.

நடிகை சோனம் கபூர் தான் சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தனுஷை தன் மகன் என சிவகங்கை தம்பதி டிஎன்ஏ சோதனை செய்ய வழக்கு தொடர்ந்தனர்.

விருதுகள்

தேசிய விருதை பொறுத்தவரை தமிழ் சினிமாவிற்கு இந்த வருடமும் ஓரவஞ்சனை தான். பலரும் ஐ படத்திற்கு விக்ரமிற்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் பிக்கு படத்திற்காக அமிதாப் பச்சனுக்கு கிடைத்தது.சிறந்த நடிகை- கங்கனா (தானு வெட்ஸ் மானு)

சிறந்த படம்- பாகுபலி

சிறந்த பொழுது போக்கு படம்- பஜிரங்கி பைஜான்

சிறந்த குணச்சித்திர நடிகர்- சமுத்திரக்கனி

சிறந்த தமிழ் படம்- விசாரணை.

சிறந்த நடிகை(ஜுரி விருது)- ரித்திகா சிங்(இறுதிச்சுற்று)

சிறந்த பின்னணி இசை- இளையராஜா(தாரை தப்பட்டை).

இதுமட்டுமின்றி இந்தியா சார்பில் விசாரணை படம் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டது. படம் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த படங்கள்

விசாரணை, உறியடி, ஜோக்கர், அப்பா, குற்றமே தண்டனை ஆகிய படங்கள் தமிழில் வசூலை தாண்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Comments