Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் இருந்து வெளிமாநிலத்திற்கு சென்று ஹிட் அடித்த மற்றும் சொதப்பிய படங்கள் எது தெரியுமா? ஸ்பெஷல்

கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு படம் மெகா ஹிட் ஆனால், தான் பல மொழிகளில் ரீமேக் ஆகும். அந்த வகையில் பெரும்பாலும் தெலுங்கு படங்களே பல மொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றது, அதையும் தாண்டி தற்போது பல தமிழ் படங்கள் தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் ஆகின்றது, அதில் நல்ல வரவேற்பு பெற்ற, வரவேற்பு பெறாத படங்களை பார்ப்போம்.

துப்பாக்கி-ஹாலிடே

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இளைய தளபதி விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படம் துப்பாக்கி, இப்படத்தை பாலிவுட்டிலும் முருகதாஸே இயக்கினார், இதில் அக்‌ஷய் குமார் விஜய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால், விஜய்க்கு முன்பே இந்த கதை அக்‌ஷய் குமாருக்கு சொல்லப்பட்டு தாமதமாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓகே கண்மணி-ஓகே ஜானு

மணிரத்னத்திற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு ப்ரேக் கொடுத்த படம் ஓகே கண்மணி, சிறிய பட்ஜெட் பெரிய வசூல் என இந்த படம் கரன் ஜோஹார் தயாரிப்பில் ஹிந்திக்கு செல்ல, ஆசிக்-2 ஹிட் ஜோடியே இதில் நடித்தால் ஓகே ஜானுவிற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து சுமாரான வசூலையே கொடுத்தது.

சிங்கம்

சிங்கம் கமர்ஷியல் படங்களின் மைல் கல் என்று கூறிவிடலாம், இந்த படத்தை யார் தான் ரீமேக் செய்யவில்லை என்பது போல், கன்னடம், ஹிந்தி, மராட்டி வரை ரீமேக் செய்து ஹிட் அடித்தது.

வரலாறு

அஜித் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்த படம் வரலாறு, பல தடைகளை தாண்டி வசூலில் வரலாறு படைத்தது, இப்படத்தை கன்னடத்தில் உபேந்திரா ரீமேக் செய்து நடித்து ஹிட் அடித்தார்.

பீட்சா

தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக கருதப்பட்ட பீட்சா தமிழில் செம்ம ஹிட் அடித்தாலும், ஹிந்தியில் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை.

பம்மல் கே சம்மந்தம்-கம்பத்கிஷ்

ஒரு சில படங்கள் ரீமேக் ரைட்ஸ் வாங்கி தான் எடுப்பார்கள், ஆனால், சில படங்கள் அப்படியே காப்பி அடித்து எடுத்துவிடுவார்கள், பொதுவாக ஹாலிவுட், கொரியன் படங்களாக தான் இருக்கும், ஆனால், கமல் நடித்த பம்மல் கே சம்மந்தம் படத்தை அப்படியே ஹிந்தியில் காப்பி அடித்து அக்‌ஷய் குமார் நடித்தது தான் கம்பத்கிஷ்

கஜினி

முருகதாஸ் திரைப்பயணத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற படம் தான் கஜினி, இப்படத்தை இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகர் அமீர்கான் ரீமேக் செய்ய முடிவெடுத்து முருகதாஸிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தார், இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படமாக ஹிந்தி கஜினி சாதனை படைத்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அவ்வை சண்முகி

கமல்ஹாசன் தமிழகம் தாண்டி நாடறிந்த கலைஞர், இவர் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் அவ்வை சண்முகி, இப்படத்தின் வெற்றி கமலை நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்திக்கு அழைத்துச்சென்றது, கமல் கதாபாத்திரத்தில் வேறு யாராலும் நடிக்க முடியாததால், அவரே ஹிந்தியில் இந்த படத்தில் நடித்தார்.

காக்க காக்க

சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து போலிஸ் கதையை வேறு தளத்திற்கு எடுத்து சென்ற படம் காக்க காக்க, இப்படம் போர்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் ஜான் அபிரகாம் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்தது.

ரமணா- கப்பர் இஸ் பேக்

முருகதாஸ் படங்களுக்கு எப்போதும் ஹிந்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, அதனால் ரமணா படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீமேக் ஆகி ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் கப்பர் இஸ் பேக் என்று வெளிவந்தது, இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

மௌனகுரு-அகிரா

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்து விமர்சகர்களால் நல்ல வரவேற்பு பெற்ற மௌனகுரு, பாலிவுட்டில் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து சோனாக்‌ஷி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அகிரா தோல்வியை சந்தித்தது.

இதுமட்டுமின்றி இந்த வாரம் அஜித்தின் வீரம் ரீமேக்காக கட்டமராயுடு வரவிருக்கின்றது, அந்த படமும் ஹிட் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments