Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோக்களின் லேட்டஸ்ட் அம்மாக்கள்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோயின்களாக நடித்த பலர் அவர்களுக்கே அம்மாவாக நடித்ததுண்டு. இதில் அப்போதிருந்தவர்களும் சரி, இப்போதிருக்கும் நடிகைகளும் ரீல் அம்மாவாக நடித்தாலும் ரியல் அம்மாவாகவே பதிவாகிவிட்டார்கள்.

பண்டரி பாய், மனோரமா, எஸ்.என்.ராஜம், சுமித்ரா, சுஜாதா, ரேணுகா என பலர் அம்மாவாக நடித்துள்ளனர்.

இதில் லேட்டஸ்ட் அம்மாக்களை இப்போது பார்க்கலாம்.

ராதிகா

1980 களின் முன்னணி ஹீரோயினான ராதிகா ரஜினி, கமல், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களோடு ஜோடியாக நடித்தவர். பூஜை படத்தில் விஷாலுக்கும், தெறி படத்தில் விஜய்க்கும், தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதிக்கும் அம்மாவாக சிறந்த நடிப்பை பதிவு செய்தார்.

சரண்யா பொன்வண்ணன்

அம்மா நடிகை என்றால் இப்போதெல்லாம் சரண்யாவின் முகம் தான் பிரகாசமாக தெரிகிறது. நிஜத்திலும் இவர் சிறந்த அம்மா தான்.

ராம் படத்தில் ஜீவாவுக்கும், ஓகே ஒகே படத்தில் உதயநிதிக்கும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கும், விஐபி படத்தில் தனுஷ்க்கு அம்மாவாகவும் நடித்து பலரின் பார்வையை திருப்பினார்.

அம்மாக்களின் அடையாளம் இவர் என்றே சொல்லலாம்.

ரோஹினி

நடிகர் ரகுவரனின் மனைவியான ரோஹினி 90 களில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பாகுபலியில் பிரபாஸ்க்கு வளர்ப்பு அம்மாவாக நடித்த இவர் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

அனுஷ்கா

பாகுபலி படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

அனுஷ்காவிற்கு அம்மா கேரக்டர் இந்த படத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்றே சொல்லலாம்.

தேவசேனா பாகுபலியின் ஹைலைட்.

நித்யா மேனன்

விஜய் 61 படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்கள். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.

என்ன தான் இருந்தாலும் மகன் விஜய்க்கு அம்மா தானே.

அனைத்து அம்மாக்களுக்கு சினிஉலகம் அன்புடன் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்வு செய்கிறது.