Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி கதையே இந்த மூன்று பெண்களால் தானா?

பாகுபலி இன்று சரித்திர கதை தாங்கி படமாக வெளிவந்து இன்று ரூ 1500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.

இப்படம் பாகுபலிக்காகவே எழுதப்பட்டது போலிருந்தாலும் இதன் பின்னணியில் மூன்று பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

ராஜ மாதா சிவகாமி

பாகுபலியை தத்தெடுத்து, வளர்த்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி பின் தண்ணீருக்குள் தன் உயிரை விட்டுவார் ராஜ மாதா சிவகாமி. இது முதல் பாகத்தில்.

பின் பாகுபலி தேவசேனா மீதுள்ள காதலால் சிவகாமியின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் ஆணைக்கினங்க கட்டப்பாவின் கையால் கொல்லப்படுகிறார்.

எனவே சிவகாமியால் தான் பாகுபலி என்று சொல்லலாம்.

அவந்திகா

வீரபெண்ணாக வலம் வரும் தமன்னா தன் படை தலைவரின் கட்டளைக்காக தேவசேனாவை காப்பாற்ற துணிந்து பின் அப்பொறுப்பை பாகுபலியிடம் ஒப்படைக்கிறார்.

தேவசேனா யார் என்ற உண்மை பாகுபலிக்கு தெரிய வர அவந்திகா தான் முக்கிய காரணம்.

பாகுபலிக்கு தன் தாய் தேவசேனா என்பதே சில காலத்திற்கு பின் தான் தெரியவரும். ஆனால் அவரை அவதூறாக பேசியவர்களை ஒரு கை பார்த்து விடுகிறார் பாகுபலி.

தேவசேனா

நகர் வலம் வரும் நேரத்தில் தேவசேனாவின் வீரத்தை கண்டே காதல் வலையில் வீழ்கிறார் பிரபாஸ். பின் அவரையே கரம் பிடிக்கிறார். இன்னல்களை அனுபவிக்கிறார்.

தேவசேனா மகிழ்மதிக்குள் நுழைந்ததால் தான் சில குழப்ப நிலைகள் குறித்த உண்மைகள் பிரபாஸ்க்கு தெரியவரும்.

பாகுபலியை சுற்றி இந்த மூன்று பெண்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் கதையே அப்பெண்களால் தான் என்றும் சொல்லலாம்.