Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் யாருடைய ரசிகை தெரியுமா? அறம் பட பேபி தன்ஷிகாவின் குரல் ! கண்கலங்கிய பெற்றோர்

சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டிய அறம் இன்னும் பல இடங்களில் ஹவுஸ் ஃபுல். கோபி நயினார் இயக்கத்தில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

நயன்தாரா மட்டுமல்ல இப்படத்தில் நடித்த பலருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. எல்லாம் இருந்தாலும் இப்படத்தின் கருவாகி போனார் பேபி தன்ஷிகா. இவரது உண்மையான பெயர் மகாலெட்சுமி.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

நயன்தாராவை டிவியில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படி என் மகள் படத்தில் அவருடன் நடிப்பாள் என நினைத்துகூட பார்க்கவில்லை என்கிறார் அவரது அம்மா.

நயன்தாரா அக்கா தான் என்னை போல தைரியமாக நடிக்கவேண்டும், எதற்கு பயப்படக்கூடாதுனு நடிக்க சொல்லி கொடுத்தாங்க என சொல்லும் மகா, தான் தனுஷ் மாமா, நயன்தாரா அக்காவின் ரசிகை என்கிறார்.

தன் மகளை பார்த்து கண்கலங்கி அழுதிருக்கிறார்கள் அவரது பெற்றோர். இப்படத்தால் தற்போது மகாவுக்கு சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். சிலர் வீட்டிற்கு வந்து செல்ஃபி எடுத்துவிட்டுபோகிறார்களாம்.

மேலும் கலெக்டர் ஆகவேணும் என்பது அவரின் ஆசையாம். வாழ்த்துக்கள் பேபி..

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments