Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் வளர்ச்சி, இத்தனை கோடியில் இருந்து இவ்வளவு கோடியா? ஸ்பெஷல்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் வளர்ச்சி சாதாரணமாக நிகழ்ந்தது இல்லை, படிப்படியாக மெல்ல தான் உச்சத்தை தொட்டார், அந்த வகையில் தற்போது மிகவும் வைரலாக ஒரு மிமி ஷேர் ஆகி வருகின்றது.

இதில் விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் வளர்ச்சி குறித்து எத்தனை கோடியில் இருந்து அவர் எவ்வளவு கோடியை எட்டியுள்ளார் என்று காட்டப்படுகின்றது.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தையே திருப்பி போட்ட படம் என்றால் பூவே உனக்காக தான், அப்படம் தான் விஜய் திரைப்பயணத்திலேயே ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம்.

இப்படம் தான் விஜய்யின் முதல் ரூ 10 கோடி வசூல் செய்த படமாம், அதை தொடர்ந்து விஜய்க்கு குடும்ப ரசிகர்களிடம் பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிய படம் துள்ளாத மனமும் துள்ளும், இப்படம் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளது.

விஜய் பல நாட்கள் தோல்விப்படங்களையே கொடுக்க அவருக்கு மிகவும் உற்சாகத்தையும், பிரமாண்ட வெற்றியை கொடுத்த படம் குஷி, இப்படம் தான் விஜய் திரை வாழ்வில் முதன் முறையாக ரூ 25 கோடி வசூல் கொடுத்த படமாம்.

பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்த கில்லி ரூ 50 கோடி கிளப்பிலும், போக்கிரி ரூ 75 கோடி கிளப்பிலும் இணைந்து சாதனை படைத்தது.

ஆனால், அந்த சமயத்தில் ரஜினி ரூ 100 கோடி படங்களையே கொடுக்க ஆரம்பித்துவிட்டார், அப்போது விஜய்யின் டார்க்கெட் அதுவாக தான் இருந்தது, ஏனெனில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் இளவரசனாக பார்க்கப்படுவது விஜய் தான்.

அதையும் தொட்டார், ஆம் துப்பாக்கி படத்தின் மூலம் முதல் ரூ 100 கோடி படத்தை கொடுத்தார், அதை தொடர்ந்து தெறியில் ரூ 150 கோடியை தொட்டு, மெர்சலில் ரூ 250 கோடியையும் எட்டிப்பிடித்துவிட்டார்.

இப்படி விஜய் மெல்ல தன் திரைப்பயணத்தில் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிப்பது தெளிவாக தெரிகின்றது. விஜய்யின் இந்த வெற்றிப்பயணம் இப்படியே தொடர வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமும்.