Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ தான்யா தீவிரவாதி, கமலை பார்த்து சொன்ன பிரமாண்ட தயாரிப்பாளர்

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் உயர வைத்தவர். இவர் எடுக்காத விஸ்வரூபங்களே இல்லை, அப்படியிருக்க இவர் எடுத்த ஒரு விஸ்வரூபம் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்த உலகமே அதை அறியும், கமல்ஹாசன் நடித்து இயக்கி பல சர்ச்சைகளை கடந்து வெளிவந்த விஸ்வரூபத்தை அத்தனை சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது.

இப்படம் வெளிவந்து 5 வருடம் ஆகிய நிலையில் இதை ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர், படத்தை யாரும் பார்க்காமலேயே ஒரு சில அரசியல் சூழ்ச்சிகளால் படத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

கமல் போராடியே பழக்கப்பட்டவர், போராட்டம் நிறைந்த கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க, அது அவர் நிஜ வாழ்க்கையிலும் பெரும் போராட்டத்தை கொடுத்தது.

தன் ஆழ்வார்பேட்டை வீடு விற்கும் நிலைக்கு வந்து பின் நாட்டை விட்டு செல்கின்றேன் என அவர் கூற, உலகம் முழுவதும் பல வீட்டு பத்திரிங்கள் அவர் வீட்டு கதவை தட்டியது அனைவரும் அறிந்ததே.

சரி இது ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தை பார்த்த லார்ட் ஆப் தி ரிங்ஸ் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் ‘யோவ் உண்மையான தீவிரவாதி நீ தான்யா, எப்படி இது போல் ஒரு படத்தை எடுத்தாய்’ என்று பாராட்டினாராம்.

இப்படி பல சோதனைகளையும், சாதனைகளையும் கடந்து வந்த விஸ்வரூபம், 5 வருடம் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது, தற்போது அனைவரின் கேள்வியும் ஒன்று தான், எப்போது சார் விஸ்வரூபம்-2 ரிலிஸ்?.