Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அல்லு சிரிஷ்ஷை பாராட்டிய ராம் சரண்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜா கோதா ஜனதா படத்தில் நடித்த அல்லு சிரிஷ்ஷை பாராட்டியுள்ளார்.

இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில், தற்போது தான் போதா ஜனதா படத்தை பார்த்தேன். என்னுடைய தம்பி அல்லுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது.

காதல் கதைக்கு ஏற்றார் போல் மிகவும் கச்சிதமாக நடித்துள்ளான். இயக்குனர் மாருதியும் நல்ல படத்தை இயக்கியுள்ளார். ஒரு அழகான வெற்றி படத்தை உருவாக்கி படத்தின் குழுவினருக்கும் எமது வாழ்த்துக்கள் என்று கூறிபிட்டிருந்தார்.

அல்லு சிரிஷ் மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்திருக்க, கீதா ஆர்ட்ஸ் பேனரில் பன்னி வாசு தயாரித்துள்ளார்.