Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் வாலு படத்தை பற்றி நடிகர் ஸ்ரீகாந்த் விமர்சித்தாரா ?

வாலு படம் நேற்று முன்தினம் தமிழகமெங்கும் வெளியானது. இதில் அஜித், விஜய் ரசிகர்களை கவரும் விதத்தில் பல விஷயங்களை படத்தில் புகுத்தி இருந்தனர் படக்குழு.

படம் தொடக்கத்திலே இளையதளபதிக்கு நன்றி தெரிவித்து தொடங்கியதால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். ஆனால் படம் முழுக்க அஜித்தை பின் பலமாக வைத்து பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிம்பு அஜித் ரசிகர் எனபது உலகம் அறிந்த உண்மை என்றாலும் பொதுவான மக்கள் அஜித்தை வைத்து ஏன் படத்துக்கு விளம்பரம் தேட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை இந்த அளவுக்கு படத்தில் காட்டியது ரொம்ப அதிகமாக உள்ளது, காட்சிகளுக்கு அதில் விசிலும், கைதட்டல்களும் வேண்டும் என்பதுக்காக இப்படி பண்ணலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் ரசிகர்கள் இதை வைத்து மிமி செய்து கலாய்த்து வருகின்றனர். தற்போது வந்த தகவல் படி ஸ்ரீகாந்த்க்கு ட்விட்டர் பக்கமே இல்லையாம். இதையெல்லாம் ரசிகர்கள் செய்யும் விஷமித்தனம் என்று தெரியவந்துள்ளது.

காதல், திருமணம் பற்றி மனம் திறக்கும் பாபி சிம்ஹா