Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தடை அதை உடை, இது தான் தனுஷ் பார்முலா- ஸ்பெஷல் வீடியோ

தனுஷ் டீன் ஏஜ் இளைஞர்கள் பலருக்கும் ரோல் மாடல். என்னது சினிமா காரன் தான் இந்தியாவில் ரோல் மாடலா வேறு யாரும் உங்கள் கண்களுக்கு தெரியாத என்று சில சமூக போராளிகள் கேட்பார்கள்.

அவர்களிடம் ஆம் தனுஷ் தான் என் ரோல் மாடல் என தைரியமாக சொல்லலாம், ஏனெனில் தனுஷ் 6அடி உயரம், வெள்ளை நிறம், 6 பேக் உடல்வாகு என ஹீரோக்களுக்கே உரிய எந்த ஒரு பார்முலாவும் இல்லாமல் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர்.

பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டியதை விட திட்டிய வார்த்தைகள் தான் அதிகம், எத்தனையோ கேலி பேச்சுக்கள், அத்தனையும் தாண்டி இன்று இந்தியாவே வியக்கும் ஒரு கலைஞனாக தனுஷ் வளர்ந்து நிற்கின்றார். எந்த துறையாக இருந்தால் என்ன சாதித்தவர்களை ரோல் மாடலாக எடுப்பதில் எந்த தவறும் இல்லை, அப்படி சாதித்தவர்களின் பட்டியலில் இந்த வயதிலேயே இடம்பிடித்துவிட்டார் தனுஷ்.

பார்க்காத விருதுகளே இல்லை, பெறாத பாராட்டுகளும் இல்லை என்று கூறும் அளவிற்கு தனுஷ் வளர்ச்சி சென்று விட்டது, தனுஷ் தான் ஸ்கிரீனுக்கும் பார்வையாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்திய ஒரு கலைஞன், உடலை ஏற்றி இறக்குவது மட்டும் நடிப்பு இல்லை, சின்ன கண் அசைவில் கூட நடிக்கலாம் என எத்தனை கமர்ஷியலிலும் தனித்துவமான தெரியும் ஒரு நடிகர்.

அவரின் பிறந்தநாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தனுஷிற்கு தெரிவித்துக்கொள்கின்றது.

கபாலி வார நாட்களிலும் கலக்குகிறது, சொதப்பியதா?