Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலியை சுட்டீங்களா? இல்லையா? டைகர் ஹரி கலக்கல் பதில்

மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் கலக்கியவர் ஹரி. இவரை தற்போது அனைவரும் டைகர் என்று தான் அழைக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் கபாலியில் இவர் டைகர் கதாபாத்திரத்தில் நடித்தது தான், இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை கிளைமேக்ஸில் இவர் சுடுவாரா? இல்லையா? என்பது போல் படம் முடியும்.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ரஜினி சார் நான் சுட்டனா? இல்லையா? என்பதற்கு உங்கள் பார்வை தான் பதில், ஒருவேளை அவர் என்னை சுட்டு இருக்கலாம், அல்லது நான் பின்னால் இருப்பவர் யாரையாவது சுட்டு இருக்கலாம்.

படத்திலேயே ஒரு நண்டுக்கதை வரும் அப்படி ஒரு நண்டு தான் நான்’ என கலகலப்பாக கூறியுள்ளார்.