Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் படத்தின் கதை இதுதானா!

நடிகை நயன்தாரா தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இதில் ஹாரர் படங்களும் உண்டு. ஏற்கனவே மாயா படத்தில் நடித்த அவர் தற்போது கொலையுதிர் காலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்க யுவன் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படம் ஹாலிவுட்டில் வெளியான ஹஷ் படத்தின் கதை தான் என சொல்லப்படுகிறது.

ஒரு பெண் எழுத்தாளர் காது கேட்காமலும், வாய் பேசாமலும் தனியே வாழ்ந்து வருவாராம். இதில் கொலை செய்வதை சைக்கோத்தனமாக செய்யும் ஒரு ஆணின் பிடியில் இப்பெண் சிக்கி எப்படி மீண்டும் வருகிறார் என்பது தான் கதையாம்.

இதனால் ஒரு வேளை இப்படத்தை ரீமேக் செய்கிறார்களா இல்லை கதை பிடித்ததால் கொலையுதிர்காலம் படத்தை அதை மையமாக கொண்டு எடுக்கிறார்களோ என்பது தெரியவில்லை.