Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளுநர் கிரண் பேடியின் கருத்தை எதிர்த்து ஆர்.ஜே.பாலாஜி காட்டம்!

தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நாடு முழுக்க பலரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. பிரபல ஊடகம் ஒன்று ஒரு விவாதம் நடத்தியது. இதில் குஷ்பூ, சுஹாசினி, ஆளுநர் கிரண் பேடி, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் குஷ்பூ, சுஹாசினி ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசினர். ஆனால் ஆளுநர் கிரண் பேடி காளைகள் துன்புறுத்தப்படுகிறது. மக்களுக்கும், காளைகளுக்கும் ஆபத்து தான். மாட்டின் வாலை பிடித்து இழுத்து விரட்டுகிறார்கள். அதை கட்டாயப்படுத்தி ஓடவைக்கிறார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதனால் உச்சநீதி மன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

இதை எதிர்த்து பேசிய பாலாஜி, நான் அகமதாபாத்தில் கிலோ கணக்கில் வெட்டப்பட்டு கிடந்த ஒட்டகங்களின் இறைச்சிகளை பார்தேன், ஏன் அதை தடை செய்யவில்லை.

விலங்குகள் தோலில் செய்யப்பட்ட ஷூ, பெல்ட்டை என தடை செய்யவில்லை. காளைகள் தழுவப்படுகிறது. கட்டிப்பிடித்து விளையாடபடுகிறது.

இது பல 100 ஆண்டு கால கலாச்சார பண்பாடு என பதிலடி கொடுத்தார்.


தொண்டன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments