Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டுக்காக இயக்குனர் பாரதிராஜாவின் உருக்கமான பேச்சு!

சினிமாவில் தமிழ் மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டியவர் இயக்குனர் பாரதிராஜா. இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு பிரச்சனைக்கு தந்து கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் சொல்லும்போது :-

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஜல்லிக்கட்டு 4000 ஆண்டு காலமாக நடந்து வரும் ஒன்று. தமிழரின் பாரம்பரியம். ஜல்லிகட்டால் மிருகவதை என்று சொல்வதை விட மனிதவதை என்றால் தான் சரி. காளைகள் சாகவில்லை. மனிதர்கள் தான் சாகிறார்கள்.

அரசு நிகழ்ச்சிகளிலே குதிரைப்படை, யானைகள் அணிவகுத்து நிற்கின்றன. காவல் துறையில் மோப்ப நாய்கள், மலைப்பகுதிகளில் தேர்தல் நேரத்தில் ஒட்டகங்கள், கழுதைகள் இவற்றுகெல்லாம் சுதந்திரம் கொடுங்கள்.

அசைவ மிருகங்களுக்கு மாற்று ஏற்பாடு உணவுகள் கொடுக்க முடியுமா, இந்தியா முழுவதும் அசைவத்தை தடை செய்ய முடியுமா, முடியுமெனில் ஜல்லிகட்டுக்கு தடை செய்யுங்கள். ஜல்லிகட்டை தடை செய்தால் தமிழன் பொறுக்க மாட்டான்.

காளைகளுக்கு தடை செய்வதில் அன்னிய தலையீடு இருப்பதை பார்க்கமுடிகிறது. காளை இனங்கள் காக்கப்படவேண்டும் என அவர் கூறினார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments