Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவிற்கு சரியான பொருத்தம்! யுவன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னனியில் இருக்கும் நடிகையான நயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ள படம் கொலையுதிர்காலம்.

பில்லா 2 இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் இவர் நடிக்கிறார். சைக்கோ கொலையாளியிடம் இருந்து ஒரு பெண் தனியாளாக எப்படி தப்பிகிறார் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

இப்படத்தின் படபிடிப்புகள் இன்று லண்டனில் தொடங்கியுள்ளது. படக்குழு சில தினங்களுக்கு முன்பே அங்கு விரைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் பேசியபோது என் நண்பரான இயக்குனர் சக்ரி ஆங்கில படத்திற்கு இணையாக படத்தின் கதையை எடுத்திருக்கிறார்.

தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என்னுடைய பட நிறுவனமும் இருக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.

கதைக்கு மிகச்சரியான பொருத்தம் நயந்தாரா. படத்திற்கு ஏற்றவாறு அவர் நன்கு நடிப்பார் என யுவன் கூறினார்.