Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்றும் இன்றும் என்றும்! DD B'Day Baby Today

டிடி என்றால் அனவருக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என உடனே சொல்லிவிடுவார்கள். தன் துறு துறு பேச்சால் பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர்.

குழந்தைகள் கூட இவரை அடையாளம் காட்டும். தொகுப்பாளராக பிரபலமாவதற்கு முன்பே 1990 சுபயாத்திரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதன் பின் தான் தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். அவர் இப்போதிருக்கும் தொலைக்காட்சியில் உங்கள் தீர்ப்பு என்றும் நிகழ்ச்சியின் மூலம் அவரது சின்னத்திரை பயணம் தொடங்கியது.

ரெக்கை கட்டிய மனசு, தடயம், ஆலயா, செல்வி, அரசி என சில முக்கிய சீரியல்களிலும் நடித்துள்ளார். டிடி என்றால் பலரும் சொல்வது ஜோடி நம்பர் ஒன் தான். அதன் தொடர்ச்சிகள் பலவற்றையும் இவரே தொகுத்து வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் அவரின் சினிமா பயணமும் தொடர்ந்தது. ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில், சரோஜா என தொடர்ந்து இப்போது அவர் தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

டிவி நிகழ்ச்சியில் ஒருமுறை இவருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருது வழங்கியபோது அவர் தன் மனம் திறந்து சில விஷயங்களை கூறினார். நான் இப்படியெல்லாம் வருவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மூன்று வயது வரை பேச்சு வரவில்லை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இவ்வளவு எல்லாம் பேசிதே இல்லை. பேச்சு போட்டியில் கலந்துகொள்ள சொல்லி என்னிடம் என் அப்பா கெஞ்சுவார்.

அதனால் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரே ஒருமுறை பேச்சுபோட்டியில் கலந்துகொண்டேன். ஆனால் எதுவுமே பேசாமல் அப்படியே வெளியே வந்துவிட்டேன் என கூறினார்.

எனது அப்பா இந்த நேரத்தில் என்னுடன் இல்லை. எனக்கு பேச்சு வரும் என்பது தெரியாமலே அவர் போய் சேர்ந்துவிட்டார் என வருந்திய டிடி இதை அவருக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என கூறினார். இன்னும் இவரின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

தாயம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments