Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 17-ல் வேலைக்காரன் என அவர் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

அடுத்தடுத்து படங்கள் இவரை தேடிவரும் நிலையில் சிவாவுக்கு இப்போது இன்னொரு லக் அடித்துள்ளது. மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளதாகவும் இதை அஜித் நடித்த வேதாளம் படத்தின் தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.