Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜி.வி.பிரகாஷ் சைக்கோ கொலையாளியா? நாச்சியார் கதை என்ன

இயக்குனர் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களை படம் முடிவதற்குள் ஒரு வழியாக்கிவிடுவார். நீங்களும் முந்தய படத்தில் நடித்தவர்களின் தோற்றத்தை பார்த்திருப்பீர்கள்.

தற்போது அவரின் படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகி அனைவரையும் அசத்தியது.

இப்படத்தில் தொடர்ந்து கொலைகள் செய்யும் சைக்கோ இளைஞனின் கதையாக உருவாகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக ஜோதிகா நடிக்கிறார். பாலாவின் பரதேசி படத்துக்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ஆனால் இந்த படத்தில் இளையராஜா இசையமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் இப்படத்திற்கு ‘நாச்சியார்’ என்று தலைப்பிட்டுள்ளனர். நேற்று பட பூஜையும் போடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மேலும் ஜீ.வி.பிரகாஷின் தோற்றத்தை பார்த்தால் அவர் தான் கொலையாளியாக இருப்பாரோ என்ற ட்விஸ்ட் எழுந்துள்ளது. மேலும் படம் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்கலாம்.