Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்

அஜித்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் அடுத்தப்படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முருகதாஸ் தீனா படத்தின் மூலம் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தேசியவிருது குறித்து சர்ச்சையான கருத்துக்களை முருகதாஸ் கூறினார், முருகதாஸ் ரட்சகன் படத்தில் ப்ரவீன்காந்திடம் உதவி இயக்குனரக இருந்தவர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்நிலையில் ப்ரவீன்காந்த் ‘நான் இயக்கவேண்டிய அஜித் கால்ஷிட்டை சூழ்ச்சி செய்து தான் முருகதாஸ் தீனா படம் இயக்கினார்.

மேலும், அதில் வரும் தல என்கின்ற வார்த்தை என்னுடைய உதவி இயக்குனருக்கு சொந்தம், அதை எந்த இடத்திலும் முருகதாஸ் கூறியது இல்லை.

இதுமட்டுமின்றி ரமணா, கஜினி, கத்தி இதெல்லாம் யார் கதை என்பது எல்லோருக்கும் தெரியும், உங்களுக்கு தேசியவிருது பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லை, உடனடியாக ப்ரியதர்ஷனிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

ப்ரவீன்காந்த் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments