Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலியை முதலில் ஒதுக்கிய ரம்யா கிருஷ்ணன்! ஏன் தெரியுமா

பாகுபலி இன்று பெரும் சாதனை படைத்த படமாக பார்க்கப்படுகிறது. உலகில் பலரின் பார்வையையும் இப்படம் தன் வசம் திருப்பியுள்ளது.

இப்படத்தில் ராஜ மாதா சிவகாமியும் மிக முக்கியமான ஒருவர். ஆரம்பத்தில் ஸ்ரீதேவி போன்ற முக்கிய நடிகைகளால் ஒதுக்கப்பட்டு கடைசியாக அந்த கதாபாத்திரத்தில் ரம்யா நடித்தார்.

ஆரம்பத்தில் அவரும் இதை வேண்டாம் என ஒதுக்கினாராம். ஏன் தெரியுமா. ஒரு படத்திற்காக 3 வருடத்தை கொடுத்தால் மற்ற படங்கள், சீரியல்கள் என நடிக்க முடியாது. பலரும் மறந்து விடுவார்கள்.

பின் மார்க்கெட் போய்விடும் என்ற நினைப்பு தானாம். பின் ராஜமௌலியே போன் செய்து கதையில் உங்க பகுதியை கேட்டுப்பாருங்கள் என்றாராம்.

கதை கேட்ட பின் பிரம்மிப்பான ரம்யா உடனே ஓகே சொல்லி கூடுதலான நாட்களை கொடுத்தாராம். இவருக்கு தான் அந்த அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது போல.