Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதா சமாதிக்கு பிரபல நடிகை திடீர் விஜயம்! என்ன சொன்னார் தெரியுமா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு அக்கட்சி பிரமுகர்கள் யாராவது சென்றால் திடீர் மாற்றங்கள் ஏதாவது அரசியலில் ஏற்படும். அப்படி சொல்வதற்கு உதாரணங்கள் உண்டு.

இந்நிலையில் அக்கட்சியின் பேச்சாளராக இருந்த நடிகை விந்தியா நேற்று சமாதிக்கு சென்றார். பின் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த அவர் நான் இந்த அணியா, அந்த அணியா என அலைபாய விரும்பவில்லை.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அம்மா மறைவினால் சோகத்தில் இருந்து இப்போது தான் மீண்டு வருகிறேன். என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை எப்போதும் அவரிடம் கொடுப்பேன்.

அவர் இப்போது சமாதிக்கு வந்து விட்டதால் இங்கு வந்தேன். பொது மக்களுக்கு மாம்பழங்களை கொடுத்தேன். இது மக்கள் மனதில் வாழும் ஜெயலலிதாவுக்கு கொடுத்தது போல. கட்சியும் அம்மாவும் மக்கள் மனதில் இருக்க இரு அணிகளும் இணைய வேண்டும்.

ஜெயலலிதாவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அதை காப்பாற்றுவேன். கட்சிக்காக உழைப்பேன் என நடிகை விந்தியா பேசினார்.

மரகத நாணயம் திரை விமர்சனம்
Comments