Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடும்ப பிரச்சனையால் போலீஸ், கோர்ட் உதவியை நாடிய பிரபலங்கள்

பிரபலங்கள் என்று வந்துவிட்டால் ரசிகர்களின் வாழ்த்தையும் பெற வேண்டும், எதிர்ப்பையும் பெற வேண்டும். அவர்களின் சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்று போலீஸ் அல்லது கோர்ட் படி ஏறினால் போதும் அது அப்படியே ரசிகர்கள் இடையில் பெரிய பிரச்சனையாக பேசப்படும்.

அப்படி சொந்த பிரச்சனையால் அதுவும் இல்லறம் சார்ந்த பிரச்சனையால் போலீஸ், கோர்ட் படி ஏறிய பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ஸ்ரீகாந்த்- வந்தனா

இருவருக்கும் முதலில் திருமண செய்தி வந்தது. பின் நடுவில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இரு தரப்பினரும் குடும்பத்தோடு மாறி மாறி வழக்குகள், விசாரணைகள், முன் ஜாமீன்கள் என சர்ச்சையில் மாட்டிக் கொண்டனர்.

அவர்களாகவே நாங்களே சமரசம் செய்து கொள்கிறோம் என பிரச்சனையை முடித்து தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

பிரசாந்த்- கிரகலட்சுமி

கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர், இதை மறைத்து ஏமாற்றிவிட்டார் என பிரசாந்த் தரப்பிலும், வரதட்சணை கொடுமை என அவரது தரப்பிலும் விவாகரத்து வழக்கு நடந்தது.

மீரா ஜாஸ்மின்- அனில் ஜான்

முதலில் இவர் இசை கலைஞரை திருமணம் செய்து கொள்ள போவதாக பல செய்திகள் வந்தது. அதோடு இவர் நடுவில் கடத்தப்பட்டார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் இவர் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் மீரா திருமணம் செய்ய இருக்கும் அனில் ஜானுக்கு பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் அவர் தங்களது திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்க, பலத்த பாதுகாப்புடன் இவர்களது திருமணம் நடந்தது.

எழுத்தாளர் தாமரை- தியாகு

சென்ற ஆண்டு தாமரை அவர்கள் தனது கணவர் தன்னை பிரிந்து வாழ்வதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் தனியாக தனது குழந்தையுடன் போராடினார்.

பாலாஜி- நித்யா

தற்போது இவர்களது பிரச்சனை தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. நித்யா தனது கணவர் ஜாதி பெயர் சொல்லி கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ரம்பா - இந்திரன்

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இவர் சில பிரச்சனைகளால் கணவரை பிரிந்து வாழ்ந்திருக்கிறார். பின் அவரே தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர்.

Comments