Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் பாடலுக்காக அனிருத் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? பாடகர் யோகி பியின் வீடியோ

ராப் பாடகர் யோகி பி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் புத்துணர்வுடன் தன் இசை பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஒரு இணையதள பேட்டியில் பேசிய போது நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எனது உடல் நிலை சரியில்லாமல் போனதாலும், என் அம்மா இறந்ததாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதிலிருந்து வர 3 வருடங்கள் ஆகிவிட்டது என பேசினார்.

விவேகம் படத்தில் அனிருத் இசையில் நான் பாடியுள்ள ராப் மிக நன்றாக வந்துள்ளது. நானும் அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தவிதமாகவும், உற்சாகம் தரும்படியும் அமைந்துள்ளது.

அனிருத் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் இசையாகவே வாழ்ந்து வருகிறார். விவேகம் பாடலை எப்படி இருக்கிறது என எல்லோரிடமும் கேட்டு கேட்டு அழகாக கொடுத்திருக்கிறார்.

சொல்லிசையில் புது வார்த்தையாக மின்னிசை என்பதை சேர்த்துள்ளேன். அனிருத்க்கு மின்னிசை இளவரசர் என வாழ்த்துகிறேன். சிறு வயதிலிருந்தே அஜித் சார் படங்களில் பாடவேண்டும், நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய நடிப்பு World class. அவர் ஹாலிவுட் லெவல் ஆர்டிஸ்ட்.

அவர் ஒரு கிளாஸ். அவர் ஒரு மாஸ். அனிருத் போஸ்டருக்கு அஜித் ரசிகர்களும், தல வெறியர்களும் இவ்வளவு ஒரு வரவேற்பு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.

Comments