Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரையில்லாத புது சாதனையை செய்த தனுஷ்! என்ன தெரியுமா

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமில்லாது, பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறி செல்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இருந்த அவர் இயக்குனராகவும் முன்னேறினார்.

சமீபத்தில் இவர் பா.பாண்டி படத்தின் மூலம் திரையுலகில் ஒரு இயக்குனராக தன் திறமையை காட்டினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இவருக்கு நல்ல இயக்குனருக்கான விருதை தெலுங்கு திரையுலகம் அறிவித்துள்ளது. 1980 ல் வெளியாகி விருதுகளை குவித்த சங்கராபரணம் படத்தின் நினைவாக இவ்விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தங்கல் படத்திற்காக அமீர்கானுக்கும், ஜனதா கரேஜ் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், நடிகை ஆலியா பட்க்கு உட்தா பஞ்சாப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் அறிவித்துள்ளார் விருதை அறிமுகப்படுத்திய சங்கராபரணம் நடிகை துளசி.

புதுமுக இயக்குனருக்கான முதல் விருது வென்ற தனுஷ்க்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.

புலிமுருகன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments