Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி படத்தில் ஸ்ரீ தேவி நடிக்காததன் பின்னணி! உண்மை வெளியானது

பாகுபலி இன்று உலகமே திரும்பி பார்த்த ஒரு வரலாற்று படமாக மாறிவிட்டது. ரூ 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரூ. 1700 கோடியை தாண்டிவிட்டது.

இப்படத்தின் கதாபாத்திரங்களில் மிகமுக்கியமானவர் ரம்யா கிருஷ்ணன். ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து ஸ்கோர் அள்ளினார். ஆனால் இவருக்கு முன்பு இப்படத்தில் நடிக்க ஸ்ரீ தேவியை அணுக அவரோ மறுத்துவிட்டார்.

தன் சொந்த விசயங்களால் பாகுபலி படத்தில் நடிக்க முடியவில்லை என அவர் தற்போது நடித்துள்ள மாம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கூறினார். ஆனால் படக்குழு இவர் ரூ. 8 கோடி கேட்டதோடு தன்னுடன் வருபவர்களுக்கு, ஃபிளைட் டிக்கெட், சாப்பாடு, தங்கும் செலவு எல்லாவற்றையும் பார்த்துகொள்ள வேண்டும் என கேட்டதாக சொல்கிறார்கள்.

இது பெரும் தொகையில் செல்வதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தார்களாம்.