Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாவா இருந்தாலும் ஆதரவு தரமாட்டேன்! நடிகர் கௌதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கொடுத்து வருகிறார். தன் திறமையை காட்டிவரும் இவர் சமீபத்தில் ரங்கூன் படம் படம் மூலம் ஹிட் கொடுத்தார்.

வரும் 30 ம் தேதி வெளியாகவுள்ள இவன் தந்திரன் படத்திலும் நடித்துள்ளார். இதன் டிரைலர், பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில் பேசிய கௌதம் இந்த படம் எல்லோரும் பார்க்கும் படியாக இருக்கும்.

என்ஜினியரிங் படித்த மாணவனின் கதை தான் இது. காதல், காமெடி கலந்த இப்படத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் படமாக இருக்கும் என அவர் கூறினார்.

மேலும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எதுவும் சொல்லவில்லை. இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் அப்போது அரசியல் பற்றி பதிலளிப்பேன்.

என் தந்தை கார்த்திக் அரசியலில் இருக்கிறார். அவருக்கு என் ஆதரவு கிடையாது என அவர் கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments