Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குற்றவாளி பல்சர் சுனிலுக்கும் எனக்கும் தொடர்பா? பொங்கிய பாவனா

நடிகை பாவனா கடந்த ஃபிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சில தகவல்கள் வெளியாகிவருகிறது.

சமீபத்தில் நடிகர் திலீப் சம்மந்தப்பட்ட கடிதம் வெளியானதோடு, பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திலீப் புகார் அளித்திருந்தார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாவனா, தான் விசாரணைக்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக அறிக்கை எதுவும் இதுவரை வெளிவிடவில்லை. தற்போது ஒரு நடிகரின் கருத்தால் நான் இப்போது பேச வேண்டிய சூழ்நிலை.

இதில் அவர், நானும் குற்றவாளி பல்சர் சுனில் நண்பர்கள் என்றும், நண்பரை தேர்வு செய்யும் முன் கவனமாக இருந்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இது என் மனதிற்கு வேதனையாக இருக்கிறது.

இப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், யாருக்காககவும் பயப்படமாட்டேன், எதையும் சந்திக்க ரெடி, போலிஸ் மீது நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.