Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியலுக்கு வந்தால் கமல் தான் பிக்பாஸ்! சொன்னது யார் தெரியுமா

கமல்ஹாசன் அரசியலுக்கு வர தில் இருக்கிறதா என்பது போல அமைச்சர்கள் பலரும் பேசி வருகின்றனர். அமைதியாக இதுவரை இருந்தவர் தற்போது பொங்கிவிட்டார்.

மக்களே அமைச்சர்கள் செய்த ஊழலை வெளியிடுவார்கள் என சமூகவலைதளம் மூலம் அறை கூவல் விடுத்துள்ளார். இந்நிலையில் காமெடி நடிகரான தாடி பாலாஜி கமலை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலில் கமலுக்கு வர தகுதி இருக்கிறதா என கேட்கிறார்கள். பிறந்தவுடனே இவர் இதற்கும், அவர் அதற்கும் என எழுதிவைக்கப்பட்டிருக்கிறது.

எல்லோரும் அவரவர்களை வளர்த்துக்கொண்டு அமைச்சர்களாகி விட்டார்கள். அதுபோல கமல் சினிமாவில் உச்சத்தை தொட்டவர். கடுமையாக உழைத்து வந்த அவர் சிறந்த அறிவு ஜீவி.

இதைவிட அவருக்கு வேறென்ன தகுதி வேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் அவர் தான் பிக்பாஸ் என கூறியுள்ளார்.

Comments