Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆண்கள் பற்றிய ஆண்ட்ரியாவின் மனநிலை இதுதானா? ஓபன் டாக்

நடிகை ஆண்ட்ரியா சினிமாவில் ஒரு தனி நட்சத்திரம். அவர் கேரக்டர் ரோலில் நடித்தாலே அந்த காட்சிகள் துண்டாக தெரியும். ஒரு முழுமையான கேரக்டரில் நடித்துள்ள அவர் நடித்துள்ள தரமணி நேற்று வெளியானது.

படத்தில் மது அருந்துவது, சிகிரெட் பிடிப்பது என அவர் ஒரு மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இது பற்றி அவர் கூறியதாவது, என்னுடைய திறமையையும், நேரத்தையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். என்னுடைய யதார்த்த நடிப்பை காட்ட சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

என்னுடைய ரோல் துணிச்சலாக அமையும் என நான் நினைக்கவில்லை. நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அமைந்துள்ளது. இக்கேரக்டரில் நடிப்பதற்கு மனதளவில் உழைக்க வேண்டியிருந்தது.

இப்படம் சொல்லும் கருத்துகள் தான் என கருத்தும் கூட. பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவதால் ஆண்களின் ஈகோவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களின் நிலை உயர்ந்து வருகிறது. இதுவே தரமணியின் வெளிப்பாடு. என் எண்ணமும் கூட என அவர் கூறியுள்ளார்.

தரமணி திரைவிமர்சனம் படிக்க

தரமணி - திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments