Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுடன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் இப்போதிருக்கும் சினிமா சூழலில் பரபரப்பான ஒரு நடிகர். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். அவர் பாலா இயக்கத்தில் தற்போது நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. வாலிகாந்த் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் செம படம் செப்டம்பர் 29 ம் தேதி வெளியாகவதாக சொல்லப்படுகிறது. அதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் வெளியாகிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஜிவியின் படங்களிலும் ஹூமருக்கு குறைவிருக்காது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் படத்திலும் காமெடி நன்றாக இருக்கும் என்பது தெரிந்ததே.

Comments