Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல ஹீரோயினாக தீபிகா இருக்க பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா?

நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் சினிமாவில் டாப் ரேஞ்ச் ஹீரோயின். நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர் இவர் தான். ஷாருக்கானுடன் இவர் ஜோடி போட்டது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.

இன்று தீபிகா இந்த புகழின் உச்சியில் இருப்பதற்கு அன்று இவரை அறிமுகப்படுத்தியவர் தான் காரணம். பாலிவுட்டில் பிரபல டான்ஸர் மற்றும் இயக்குனரான ஃபரா கான் தன்னுடைய ஓம் சாந்தி ஓம் படத்திற்கு ஹீரோயின் தேடியுள்ளார்.

இதற்காக தன் தோழி மலாய்க்கா அரோராவிடம் ஹிரோயினை தேவை என கேட்டுள்ளார். அப்போது ஒரு ஃபேஷன் ஷோவுக்கு சென்றிருக்கிறார் மலாய்க்கா. அப்போது ராம்ப் வாக் வந்த மாடலை பிடித்து போக அவரை ஃபராவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் மலாய்க்கா.

அந்த மாடல் தான் இன்று புகழ் பெற்ற நட்சத்திரமாய் விளங்கும் தீபிகா படுகோனே.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments