Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பாக்கியில் நினைத்தேன் இன்று நடந்து விட்டது! முருகதாஸ் ஓபன் டாக்

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் நடிக்க ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய முருகதாஸ் பத்து வருடங்களுக்கு முன் மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தை பார்த்தேன். 3 வாரம் ஆகியும் ஒரு திருவிழா போல இருந்தது. அதே போல போக்கிரி படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்து அவரை வைத்து படம் இயக்க விரும்பினேன்.

பிறகு துப்பாக்கி படத்தை அவரை வைத்து தயாரித்து இயக்க வேண்டும் என்று திட்டம். ஆனால் அது இப்போது தான் நடந்திருக்கிறது என கூறினார்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments