Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜாதி பற்றி பேசிய எஸ்.வி.சேகருக்கு கபாலி இயக்குனர் பதிலடி

கடந்த சில நாட்களாகவே நீட், ஜாதி, தலித் பற்றிய விவாதங்கள் நடந்துவருகிறது. "தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் தமிழன் தமிழன் என்று பூச்சாண்டி காட்டப்போகிறீர்கள்? இங்கே ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது. நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன்.சாதியை ஒழிக்காமல் எப்படி நீங்கள் தமிழ் தேசியத்தை வென்றெடுக்க முடியும்" என பா.ரஞ்சித் மேடையிலேயே கோபமாக பேசினார்.

தான் ஒரு தலித் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் கபாலி இயக்குநர் ரஞ்சித்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ட்விட் செய்திருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதில் "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்" என எஸ்.வி.சேகர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலடி அளித்துள்ள இயக்குனர் ரஞ்சித் "தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்," என தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments