Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தில் விஜய்யிடம் பாராட்டை வாங்கிய முக்கிய நடிகர்!

மெர்சல் விஜய் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் பரவிக்கிடக்கும் வைரல் எனக்கூட சொல்லாம். சமீபத்தில் நடந்த டீசர் சாதனை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நேற்று 17 மில்லியனில் இருந்து பார்த்தவர்களின் எண்ணிக்கை இன்று 18 மில்லியனாக மீண்டும் உயர்ந்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு இணையாக முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. வில்லனாக மெர்சலில் மிரட்டும் இவருக்கும், ஹீரோ விஜய்க்கும் இடையேயான காட்சிகளை நான்கு நாட்களாக படமாக்கினாராம்.

மேலும் அப்போது சூர்யாவின் நடிப்பை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். பிரபலங்களிடம் பாராட்டை வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்பது தெரிந்த விசயம் தானே.

எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் இரண்டாவது படமான குஷி 17 வருடங்களுக்கு முன் வெளியானது. இதில் விஜய் ஜோதிகா இருவரும் நடித்திருந்தார்கள். இது மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.

இதன் பின் விஜய் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கவில்லை. தற்போது மெர்சல் படத்தில் விஜயுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Comments