Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிலிருந்து வெளியே வந்த சுஜா வெளியிட்ட கடிதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் wild card மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் சுஜா வருணி. 100 வது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் வெளியேற்றப்பட்டார். இவர் தற்போது ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றி தெரிவிக்கிறேன். என்னை பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தை தந்தது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. பட்டி, ஹரிஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.

கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்து பேசும் போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வருவதில் மகிழ்ச்சி. உண்மை வெல்லும் என நம்பிக்கை உண்டு. ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்

மெர்சல் திரை விமர்சனம்
Comments