Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அர்ஜீன் ரெட்டி ரீமேக்கில் துருவ் விக்ரமின் ஹீரோயின் இவரா? ரீமேக் உரிமை வாங்கிய நிறுவனம்

கடந்த ஆகஸ்ட் 25 ல் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த அர்ஜீன் ரெட்டி தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தை மலையாளம் மற்று தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இ4 நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகர் விக்ரமுக்கு சேது படம் மூலம் தமிழக அரசு விருதை பெற்றுத்தந்தவர் இயக்குனர் பாலா. விக்ரமுக்கு சினிமாவிலும் இப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அதோடு நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் மகன் துருவ் விக்ரம் அர்ஜீன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இயக்குனர் பாலா தான் இப்படத்தையும் இயக்குவதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா சர்மாவை ஹீரோயினாக நடிக்க பேச்சுவாரத்தை நடந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

மெர்சல் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments