Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிஜமாகவே வில்லன் தாக்கியதால் அழுதேன்! உதயநிதி ஃபீலிங்

நடிகர் உதயநிதி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முனைப்புடன் இருந்து வருகிறார். அவரது படங்கள் பெரிதளவில் போகவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதில் ஒன்றாக அவர் நடித்துள்ள இப்படை வெல்லும் விரைவில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். இதில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய உதயநிதி, டேனியல் பாலாஜியுடன் சண்டை போடும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சுரேஷ் உடன் சண்டை போட்ட போது அவர் நிஜமாகவே அடித்துவிட்டார்.

ஃபைட் மாஸ்டரிடம் இந்த ஆளு உண்மையாகவே அடிக்கிறார் சார், வலிக்குது என அழுதேன். காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிவாங்கியும் நடித்தேன் என கூறினார்.

Comments