Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் விஜய்யிடம் பாராட்டு வாங்கிய குட்டி வடிவேலுவின் ஆசை என்ன தெரியுமா?

மெர்சல் படத்தில் வடிவேலுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராஜ மாணிக்கம். ஆடிஷன் என கேள்வி பட்டு ஜூனியர் வடிவேலுவை அவரது மாமா தான் மதுரைக்கு அழைத்து சென்றாராம்.

முதில் வாய்ஸ் டெஸ்ட் எடுத்த பிறகு ஒகே ஆகிவிட்டாராம். இரண்டாவது ஆடிஷன் சென்னையில் நடக்க அங்கு வந்திருந்த அட்லி டபுள் ஓகே செய்துவிட்டாராம். இவருக்கு சொந்த ஊர் ராசிபுரம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது 50 நாட்கள் மெர்சல் படப்பிடிப்பில் தான் இருந்தாராம். முதல் நாள் முதல் காட்சியே விஜய்யுடன் தான். நான் விஜய் ஃபேன். என் நடிப்பை பார்த்து அவர் பாராட்டினார்.

ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என நினைக்கவில்லை. இப்போது 10 ம் வகுப்பு படிப்பதால் பள்ளிக்கூட பிசி. லீவு போட முடியாது. நடிக்கும் ஆசை வந்துவிட்டாலும் படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பதே என் கனவு என பேட்டியில் கூறியுள்ளார்.

Comments