Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா நாகசைதன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சி எப்போது? நாகசைதன்யா பதில்

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யாவுக்கு கடந்த வாரம் திருமணம் கோவாவில் சம்பிரதாய முறைப்படி நடந்தது. மிக நெருங்கிய உறவினர்கள், முக்கிய விஐபிக்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதனால் அழைப்பு வராத பலருக்கும் வருத்தம் இருந்தது. அவர்களுக்கு பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்ற சொல்லப்பட்டது. தற்போது இதை எதிர்பார்த்து தெலுங்கு சினிமாவில் பலர் காத்திருக்கிறார்கள்.

இன்று நாகார்ஜுனா, சமந்தா நடித்துள்ள Raju Gari Gadhi 2 படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் நாகார்ஜுனாவிடம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் இப்போது ஒன்றும் அவசரமில்லை. அவர்களை கொஞ்சம் நாட்கள் ஃபிரியாக விட்டுவிடுவோம். திருமணம், மற்றவைகளை அவர்கள் எஞ்சாய் பண்ணட்டும். பிறகு அவர்கள் இருவரும் தேதியை முடிவெடுப்பார்கள் என அவர் கூறினார்.

Comments